நம்மைப் பற்றி

மக்கள் கவிஞரின் பாடல் வரிகளில் உள்ள தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் மனித நேயம்
ஆகியவைகளை மாணவர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் கொண்டு சென்று அவர்களது
மனங்களில் பதிய வைக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதை முதன்மையான
கொள்கையைக் கொண்டுள்ளது மக்கள் கவிஞர் மன்றம்.

மக்கள் கவிஞர் மன்ற விழாக்கள்

தன்னார்வலராக சேவையாற்றிட‌

போட்டிகளில் கலந்துகொள்ள‌

மக்கள் கவிஞர் மன்றம்

கடந்த 2005 முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் மக்கள் கவிஞரது பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை மாணவர்களைக் கொண்டு பாடவைக்கும் பாட்டுப் போட்டிகள் நடத்தி அந்த போட்டிகளில் வென்றவர்களுக்கு, அடுத்து வரும் மே முதல் நாளான தொழிலாளர் தினத்தில் நடக்கும் “மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
கலை இலக்கிய விழா” மேடையில் பரிசுகள் வழங்கப்படும் மேலும் இவ்விழாவில் முதன்மையாக வந்த மாணவர்கள் போட்டியில் பாடிய பாடலை பாடுவார்கள்.

சிறப்பு விருந்தினராக சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்
கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்வார்.
இறுதியில் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு சொற்பொழிவாளர்
மக்கள் கவிஞரைப் பற்றி விரிவாக சொற்பொழிவாற்ற விழா முடியும்.
இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் மக்கள் கவிஞரின் நினைவு தினமான 08ம் தேதியை ஒட்டி வார இறுதியில் மக்கள் கவிஞர்
நினைவு தின நிகழ்ச்சியில் மாணவர்களை ஒருங்கிணைத்து கவியரங்கம் சொற்பொழிவுகள் நடைபெறும்.

ஆண்டு தோறும் சனவரி முதல் மார்ச்க்குள் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களை ஒன்று கூட்டி ஆண்டு கூட்டம் நடைபெறும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்றத்தின் புதிய செயலவை தேர்ந்தெடுக்கப்படும்.