#

பாட்டுப்போட்டி

  • Start: April 15, 2018 9:00 am
  • End: April 15, 2018 3:00 pm

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளில் உள்ள தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் மனித நேயக் கருத்துக்களை மாணவர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கில், மக்கள் கவிஞர் மன்றம் கடந்த பதினாங்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

அத்த வகையில் இவ்வாண்டு மே தினத்தன்று நடைபெறவுள்ள உழைப்பாளர் தின கலை இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக, தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை பங்கேற்கக்கூடிய, பாட்டுப்போட்டியை மக்கள் கவிஞர் மன்றம், வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவோடு ஏற்பாடு செய்துள்ளது.

பாட்டுப்போட்டியின் விபரங்கள்

நாள்:   15 ஏப்ரல் 2018

நேரம்:  காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

இடம்:  உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்

 

பதிவுக்கான இறுதி நாள்:  07 ஏப்ரல் 2018

பிரிவு 1 – தொடக்க நிலை 1

பிரிவு 2 – தொடக்க நிலை 2 & 3

பிரிவு 3 – தொடக்க நிலை 4, 5 & 6

பிரிவு 4 – உயர்நிலை 1,2,3 & 4

பிரிவு 5 – பொது( 16 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள்)

பாட்டுப்போட்டியின் விதிமுறைகள்

  1. இவ்வாண்டு பாட்டுப்போட்டி இரண்டு (2) சுற்றுகளாக நடத்தப்படும்.
  2. போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள தங்களுக்கான பிரிவில் இருந்து இரண்டு பாடல்களை தெரிவு செய்யவேண்டும்.
  3. ஒவ்வொரு பிரிவிலிருந்து 10 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவர். இதில்  அதிக மதிப்பெண்கள்  பெற்ற 5 போட்டியாளர்கள்  இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவர். மீதமுள்ள ஐவருக்கு நினைவு பரிசு வழங்கப்படும்.
  4. முதற்சுற்றில் போட்டியாளர்கள் பின்னணி இசை இல்லாமல் பாட வேண்டும். இரண்டாவது சுற்றில் (Minus- one track) இசையுடன் பாடவேண்டும்.
  5. பாடல் வரிகளை பார்த்து பாடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
  6. இரண்டாவது சுற்றில் 5 போட்டியாளர்கள்  இசையுடன் பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் திறமைக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, முதல், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்ற தரவரிசைபடி பரிசுகள் வழங்கப்படும்.
  7. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மே ஒன்றாம் தேதி நடைபெறும் உழைப்பாளர் தின விழாவில் வழங்கப்படும்.
  8. போட்டியன்று, மாணவர்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  9. போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் போட்டி முடிவுற்ற பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  10. போட்டியன்று, பெயர்களை பதிவு செய்ய 45 நிமிடங்களுக்கு முன்னதாக வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  11. போட்டியில் பங்குபெற விரும்புவோர் mkm.org.sg என்ற எங்கள் இணையதள பக்கத்திற்கு சென்று தங்களின் பெயர், அடையாள அட்டை எண், வயது, பள்ளியின் பெயர், வகுப்பு, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் போட்டிக்கு தேர்ந்தெடுத்த 2 பாடல்கள் ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.
  12. போட்டிக்கு பதிவு செய்வதற்கான இறுதி நாள்  ஏப்ரல் 7  2018.

பாட்டு போட்டிக்கான மேல் விபரங்களுக்கு திரு. வி.ராஜாராம், 9276 2767 அல்லது திருமதி புவனேஸ்வரி, 98631471 தொடர்பு கொள்ளவும்.

 

பிரிவு 1 – தொடக்க நிலை 1
பிரிவு 2 – தொடக்கநிலை 2 & 3
பிரிவு 3 – தொடக்கநிலை 4,5 & 6

1) சின்னப்பயலே சின்னப்பயலே… படம்: சௌபாக்கியவதி 
2) சின்னப் பெண்ணான… படம்: ஆரவல்லி 
3) செய்யும் தொழிலே தெய்வம் 
4) வீடு நோக்கி… படம்: பதிபக்தி 
5) படிப்பு தேவை அதோடு உழைப்பும் தேவை 

பிரிவு 4 – உயர்நிலை 1, 2, 3 & 4

 1) உறங்கையிலே… படம்: சக்ரவர்த்தி திருமகன் 

2) குறுக்கு வழியில்… படம்: மகாதேவி 

3) ஒன்றுபட்டால் உண்டு 

4) வாடிக்கை மறந்தது ஏனோ… படம்:கல்யாணப் பரிசு 

5) இந்த மாநிலத்தை பாராய் மகனே…படம்:கல்யாணிக்கு கல்யாணம் 

பிரிவு 5 – பொது( 16 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள்)

1) துள்ளாத மனமும் துள்ளும்… படம்:கல்யாணப் பரிசு 
2) ஆசையினாலே மனம் 
3) என் அருமை காதலிக்கு 
4) உனக்கு எது சொந்தம் 
5) இதுதான் உலகமடா, மனிதா இதுதான் உலகமடா 

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள “பதிவு” பொத்தானை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

Sharing:
2 Beatty Road, Singapore , Singapore