மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளில் உள்ள தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் மனித நேயக் கருத்துக்களை மாணவர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கில், மக்கள் கவிஞர் மன்றம் கடந்த பதினான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு மே தினத்தன்று நடைபெறவுள்ள உழைப்பாளர் தின கலை இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக, தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை பங்கேற்கக்கூடிய, பாட்டுப்போட்டியை மக்கள் கவிஞர் மன்றம், வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவோடு ஏற்பாடு செய்துள்ளது.

பாட்டுப்போட்டியின் விபரங்கள்

நாள்: ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2019

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்

பதிவுக்கான இறுதி நாள்: 04 ஏப்ரல் 2019

பிரிவு 1 – தொடக்க நிலை 1
பிரிவு 2 – தொடக்க நிலை 2 & 3
பிரிவு 3 – தொடக்க நிலை 4, 5 & 6
பிரிவு 4 – உயர்நிலை 1,2,3, 4 & 5
பிரிவு 5 – பொது (17 வயதுக்கு மேற்பட்டவர்கள்)

பாட்டுப்போட்டியின் விதிமுறைகள்

இவ்வாண்டு பாட்டுப்போட்டி இரண்டு (2) சுற்றுகளாக நடத்தப்படும்.

போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள தங்களுக்கான பிரிவில் இருந்து இரண்டு பாடல்களை தெரிவு செய்யவேண்டும்.

முதல் சுற்றிலிருந்து தொடக்கநிலை பிரிவிலிருந்து 8 போட்டியாளர்கள், உயர்நிலை மற்றும் பொது பிரிவிலிருந்து 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவர். இவர்கள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறுவர்.

முதற்சுற்றில் போட்டியாளர்கள் பின்னணி இசை இல்லாமல் பாட வேண்டும்.

இரண்டாவது சுற்றில் (Minus- one track) இசையுடன் பாடவேண்டும். பாடல் வரிகளைப் பார்த்து பாடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இரண்டாவது சுற்றில் போட்டியாளர்களின் திறமைக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டும். இரண்டாம் சுற்று போட்டியில் முதல், இரண்டு, மூன்று என்ற தரவரிசைபடி பரிசுகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்படும்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் நிகழ்ச்சி இறுதியில் வழங்கப்படும். போட்டியன்று. மாணவர்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம். போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் போட்டி முடிவுற்ற பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியன்று, பெயர்களை பதிவு செய்ய 45 நிமிடங்களுக்கு முன்னதாக வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போட்டியில் பங்குபெற விரும்புவோர் www.mkm.org.sg என்ற எங்கள் இணையதள பக்கத்திற்கு சென்று தங்களின் பெயர், அடையாள அட்டை எண், வயது, பள்ளியின் பெயர், வகுப்பு, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் போட்டிக்கு தேர்ந்தெடுத்த 2 பாடல்கள் ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.

இசை வட்டை (minus track) ஐந்து வெள்ளி ($5) கட்டணத்தை வங்கி பணம் மாற்று சேவை மூலமாக (atm or online bank transfer) செலுத்தி எங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். வங்கி கணக்கு எண் (POSB savings AC No) 038-54574-4.

போட்டிக்கு பதிவு செய்வதற்கான இறுதி நாள் 04 ஏப்ரல் 2019. பாட்டு போட்டிக்கான மேல் விபரங்களுக்கு:

திருமதி புவனேஸ்வரி 9863 1471 அல்லது திரு நாகராஜனை 8189 5362 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

 

Primary / தொடக்க நிலை:

 1.சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா

2.சின்ன பெண்ணான போதிலே

3.செய்யும் தொழிலே தெய்வம்

4.வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

5.தூங்காதே தம்பி தூங்காதே

 

Secondary / உயர்நிலை:

1.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்

2.கையில வாங்கினேன் பையில  போடல

3.திருடாதே பாப்பா திருடாதே

4.படிப்பு தேவை அதோடு உழைப்பும் தேவை

5.துள்ளாத மனமும் துள்ளும்

 

General / பொது (17 வயதுக்கு மேற்பட்டவர்கள்):

1.ஆசையினாலே மனம்

2. சொல்லுறத சொல்லிப்புட்டேன்

3.ஆடை கட்டி வந்த நிலவோ

4.என் அருமை காதலிக்கு

5.வாடிக்கை மறந்தது ஏனோ

போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட சுட்டியின் மூலம் பதிவு செய்யலாம்.