மக்கள் கவிஞர் மன்றம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டுப்போட்டி – 2024

காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். தமிழில் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் அவருடைய சிறப்பு.

மக்கள் கவிஞருடைய பாடல்களில் உள்ள நல்ல பயனுள்ள கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, மே தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலை இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கக்கூடிய பாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

பாட்டுப்போட்டியின் விவரங்கள்:

நாள்: 31 மார்ச் 2024

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்

பதிவுக்கான இறுதி நாள்: 25 மார்ச் 2024

பிரிவு 1 – தொடக்க நிலை 1

பிரிவு 2 – தொடக்க நிலை 2 மற்றும் 3

பிரிவு 3 – தொடக்க நிலை 4, 5 மற்றும் 6

பிரிவு 4 – உயர்நிலை 1,2,3 மற்றும் 4

பிரிவு 5 – பொது( 16 வயதுக்கு மேற்பட்டவர்கள்)

பாட்டுப்போட்டியின் விதிமுறைகள்

  1. இவ்வாண்டு பாட்டுப்போட்டி இரண்டு (2) சுற்றுகளாக நடத்தப்படும்.
  2. போட்டியில் பாடுவதற்கு நீங்கள் இரண்டு பாடல்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.
  3. முதற்சுற்றில் பின்னணி இசை இல்லாமலும், இரண்டாவது சுற்றில் -1 (Minus one Karaoke) இசையுடன் பாடவேண்டும்.
  4. பாடல் வரிகளை பார்த்து பாடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
  5. ஒவ்வொரு பிரிவிலிருந்து 10 பேரை தேர்ந்தெடுத்து, இரண்டாவது

சுற்றுக்கு அனுப்பபடும்.

  • தொடக்கநிலை பிரிவுகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு

முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிகளோடு 7 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்

  • உயர்நிலை மற்றும் பொதுப்பிரிவினருக்கு, முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிகளோடு 3 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
  • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மே ஒன்றாம் தேதி நடைபெறும் உழைப்பாளர் விழாவில் வழங்கப்படும்.
  • போட்டியன்று, மாணவர்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் போட்டி முடிவுற்ற பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  • போட்டியன்று, பெயர் பதிவு செய்ய 45 நிமிடங்களுக்கு முன்னதாக வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • எங்கள் இணையதள பக்கம் https://mkm.org.sg க்கு சென்று பங்கேற்பாளர்கள் தங்களின் பெயர், அடையாள அட்டை எண், வயது, பள்ளியின் பெயர், வகுப்பு, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை குறிப்பிட வேண்டும். போட்டிக்கு தேர்ந்தெடுத்த 2 பாடல்களை பதிவிடவும்.
  1. இப்போட்டிக்கு பதிவு செய்வதற்கு இறுதி நாள் 25 மார்ச் 2024

தேர்ந்தெடுக்கக்கூடிய பாடல்களின் பட்டியல்:

  1. சின்ன பயலே சின்ன பயலே படம்: அரசிளங்குமரி https://www.youtube.com/watch?v=XzZyvMmsa-A

2. படிப்பு தேவை அதோடு உழைப்பும் தேவை படம்: சங்கிலி தேவன் https://www.youtube.com/watch?v=UORwd8esf0o

3. ஆடை கட்டி வந்த நிலவோ படம்: ஆரவல்லி

4. வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே படம்: பதிபக்தி https://www.youtube.com/watch?v=SgU5ObICMtw&t=1s

5. கையில வாங்கினேன் பையில போடல படம்:  இரும்புத்திரை https://www.youtube.com/watch?v=iZbrVlmQfvI

6. சொல்லுறதை சொல்லிப்புட்டேன் படம்: பாண்டித் தேவன் https://www.youtube.com/watch?v=Z-KSYsr4sew

7. துள்ளாத மனமும் துள்ளும் படம்: கல்யாண பரிசு https://www.youtube.com/watch?v=MateLCxvfZQ

8. வாடிக்கை மறந்ததும் ஏனோ படம்: கல்யாண பரிசு https://www.youtube.com/watch?v=XUFiNhC8CcA&list=RDXUFiNhC8CcA&start_radio=1

9. செய்யும் தொழிலே தெய்வம் படம்: ஆளுக்கொரு வீடு                    https://www.youtube.com/watch?v=OT_94-mcgUw

10. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்

11. பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது

12. சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி

13. தில்லை அம்பல நடராஜா

14. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

(Minus one Karaoke) இசை மென்பொருள் வடிவில் எங்களிடம் உள்ளது.  தேவைப்படுவோர், திரு வி. ராஜாராம் 92762767 என்ற எண்ணுக்கு அல்லது திருமதி புவனேஸ்வரி +65 9622 5341 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.